உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த மோகூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் மனைவி திரிஷா,20; இருவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. கடந்த 9ம் தேதி இரவு கணவன், மனைவி இருவரும் வழக்கம்போல் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு துாங்க சென்றுள்ளனர். இந்நிலையில், நள்ளிரவு வினோத் எழுந்து பார்த்த போது மனைவி திரிஷா இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து, பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மனைவி திரிஷாவை கண்டுபிடித்து தரக்கோரி, கணவன் வினோத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை