மேலும் செய்திகள்
கணவர் மாயம் மனைவி புகார்
31-Jul-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷம், 36; இவருக்கு கிருஷ்ணவேணி, 32; ராஜேஸ்வரி, 29; என இரண்டு மனைவிகள் உள்ளனர். ராஜேஸ்வரி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. நேற்று காலை 7:00 மணியளவில் சந்தோஷ் அவரது முதல் மனைவி கிருஷ்ணவேணியுடன் கட்சிக்குச்சான் கிராமத்தில் உள்ள சின்னதுரை என்பவர் நிலத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தார். அங்கு ராஜேஸ்வரி சாப்பாடு எடுத்து வந்து கொடுத்து விட்டுச், சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து சந்தோஷ் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
31-Jul-2025