உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புதிய நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?

புதிய நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 7.30 லட்சம் ரூபாய் மதிப்பில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.இந்த தொட்டி கட்டப்பட்டு, 6 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேல்நிலை நீர்தேக்க தொட்டியை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை