மேலும் செய்திகள்
விஷம் குடித்த முதியவர் சாவு
30-Oct-2024
பைக்கிலிருந்து விழுந்த தி.மு.க., நிர்வாகி சாவு
03-Nov-2024
சின்னசேலம் : நாககுப்பம் கிராமத்தில் பூச்சி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.சின்னசேலம் அடுத்த நாககுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி சரோஜா, 57; இவர் கடந்த 4 ஆண்டுகளாக சிறு நீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்றும் சிறு நீரக கோளாறு சரியாகததால் மணமுடைந்த சரோஜா கடந்த 5 ம் தேதி காலை 11 மணியளவில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கியுள்ளார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரோஜா நேற்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Oct-2024
03-Nov-2024