உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பூச்சிக்கொல்லி மருந்து குடித்து பெண் பலி

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து பெண் பலி

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே பூச்சிக்கொல்லி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி தாலுகா, கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி சுகுணா,35; இவர் கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலி மற்றும் அலர்ஜி பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். கடந்த அக்., 30ம் சுகுணாவுக்கு வயிற்று வலி அதிகமானது. வலி தாங்கமுடியாததால் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருத்து குடித்து மயங்கினார். தகவலறிந்த அவரது குடும்பத்தினர் சுகுணாவை மீட்டுகள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுகுணா உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ