மேலும் செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்
06-Apr-2025
திருக்கோவிலுார்: அரகண்டநல்லூர் அருகே பைக்கில் சென்ற பெண் கீழே விழுந்து இறந்த விவகாரத்தில், இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அரகண்டநல்லுார் அடுத்த ஒட்டம்பட்டை சேர்ந்தவர் சின்னப் பையன் மனைவி ராணி, 45; இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அடுக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரகுமான் மகன் சலாம், 47; என்பவருடன் பைக்கில் கண்டாச்சிபுரம் - வீரபாண்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.ஒட்டம்பட்டு காப்புக்காடு, வண்டிப் பாட்டையில் பைக் சென்ற போது, பின்னால் உட்கார்ந்து இருந்த ராணி தலை குப்புற கவிழ்ந்து, கீழே விழுந்தவர் தலையில் பலத்த காயம் அடைந்து இறந்தார்.இந்த சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகள் சினேகா, அரகண்டநல்லுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சலாம் மற்றும் அவரது மகன் ஜமால், 27; ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
06-Apr-2025