உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

சின்னசேலம்; பெத்தானூர் கிராமத்தில் பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.சின்னசேலம் அடுத்த பெத்தானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி சாந்தி, 42. ஊழியரான இவர் கடந்த 21ஆம் தேதி இரவு 10 மணியளவில் சின்ன சேலத்தில் இருந்து பெத்தானுார் நோக்கி தனது கணவருடன் பைக்கில் சென்றார்.ராயர்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பைக் வேக தடையின் மீது ஏறி உள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து சாந்தி படுகாயம் அடைந்தார்.அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பல னின்றி சாந்தி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை