உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி

பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். சங்கராபுரம் அடுத்த மேல்சிறுவலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மனைவி ஜெயா, 45; நேற்று திருக்கோவிலுார் அடுத்த எடையூர் கிராமத்தில் அவரது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். விழா முடிந்து மதியம் 1:30 மணிக்கு, மணலுார்பேட்டை பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக எடையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் கமலேஷ், 16; சிறுவன் ஓட்டிய பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார். மணலுார்பேட்டை - தியாகதுருகம் சாலையில், அருந்தங்குடியில் இருந்து மெயின் ரோடு சந்திப்பு அருகே எதிரில் வந்த டி.என். 63 பி.எம். 8500 மகேந்திரா சைலோ கார் பைக் மீது மோதியது. இதில் ஜெயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டி சென்ற சிறுவன் கமலேஷ் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் கமலேசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காரை ஓட்டிச் சென்ற காரைக்குடி, கலனிவாசலை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ராமு, 30; மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி