பெண்ணை ஆற்றில் முதியவர் உடல்
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.திருக்கோவிலுார், தாசார்புரம், தென்பெண்ணை ஆற்றின் ஓரத்தில் நேற்று காலை 7:00 மணி அளவில் முதியவர் ஒருவரின் உடல் ஆற்றில் அடித்து வரப்பட்டது. திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை கைப்பற்றி அவர் யார் என்ற விபரம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.