உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்லுாரியில் மகளிர் சுகாதார மேலாண்மை பயிற்சி முகாம்

கல்லுாரியில் மகளிர் சுகாதார மேலாண்மை பயிற்சி முகாம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் மகளிர் சுகாதார மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் , மாணவிகளுக்கு, மகளிர் சுகாதார மேலாண்மை சிறப்பு பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது. கல்லுாரி துணை முதல்வர் மீனாட்சி வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, முகாமை துவக்கிவைத்து உரையாற்றினார். செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ், நிர்வாக அலுவலர் குமார் முன்னிலை வகித்தனர்.வட்டார இயக்க மேலாண்மை நிர்வாகி ஸ்ரீதர், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜகுமாரி, பயிற்றுநர் சித்ரா கலந்து கொண்டு மகளிர் சுகாதாரம் மற்றும் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினர். நாகித் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.பேராசிரியர் ஜெயா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ