உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மயங்கி விழுந்த கூலி தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்னர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்தவர் முருகேசன்,60; கூலி தொழிலாளி. இவர் நேற்று (நவ.,10) கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். உடன், அருகிலிருந்தவர்கள் முருகேசனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலினின்றி முருகேசன் இறந்தார். புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ