மேலும் செய்திகள்
விபத்தில் கூலி தொழிலாளி பலி
18-Apr-2025
சின்னசேலம்::சின்னசேலம் அருகே வேன் மோதிய விபத்தில் சென்ட்ரிங் தொழிலாளி இறந்தார்.சின்னசேலம், குறும்பர் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ், 48; சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர், நேற்று மதியம் 12:00 மணியளவில் தனது மொபட்டில் காளசமுத்திரம் கிராமத்திற்கு சென்ட்ரிங் வேலைக்குச் சென்றார். பூண்டி - காளசமுத்திரம் சாலையில் சென்றபோது எதிரே வந்த வேன் ராமதாஸ் மொபெட் மீது மோதியது. இதில், ராமதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-Apr-2025