உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரமணா பப்ளிக் பள்ளியில் உலக அஞ்சல் தின விழா

ரமணா பப்ளிக் பள்ளியில் உலக அஞ்சல் தின விழா

திருக்கோவிலுார்; ரமணா பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் உலக அஞ்சல் தின விழா கொண்டாடப்பட்டது. திருக்கோவிலுார் அடுத்த காட்டுச்செல்லுார் ரமணா பப்ளிக் சி.பி.எஸ்.இ., மேல்நிலை பள்ளியில் உலக அஞ்சல் தின விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தாளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டு கடித போக்குவரத்தின் அவசியம், அதன் துவக்க கால சம்பவங்கள் குறித்து விளக்கி கூறினர். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி மகிழ்ந்தனர். பள்ளி முதல்வர் உஷா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை