உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் யோகா பயிற்சி

ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் யோகா பயிற்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் யோகா தின நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் ஜெயலஷ்மி தலைமை தாங்கினார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது: தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக உள்ளது. இதனால் துாக்கமின்மை, வகுப்பறையில் பாடங்களை கவனிக்காதது உட்பட பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன.மனஅழுத்தம் தொடர்பான பிரச்னைகள், மனதை ஒருநிலைப்படுத்துதல், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு யோகா பயிற்சி மிகவும் முக்கியமானது. முறையாக பயிற்சி பெற்று, தினமும் ஒரு மணி நேரம் யோகாசனம் செய்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம். இவ்வாறு அவர் பேசினார். நிர்வாக அலுவலர் ரவி, துணை முதல்வர் பாபு முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு யோகாசனம் கற்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நிறுவனர் செந்தில்குமார், தாளாளர் ஜனனிசெந்தில்குமார், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ