உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண் கர்ப்பம் வாலிபர் கைது

பெண் கர்ப்பம் வாலிபர் கைது

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த ஆண்டிப்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் தயாளன் மகன் தனுஷ், 19; திருக்கோவிலுார் அடுத்த ஒரு கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.அப்போது, 19 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறியதால் அந்த பெண் தனுஷூடன் நெருங்கிப் பழகினார். இதில், அந்த பெண் கர்ப்பமானார்.இதனால், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் கேட்டதற்கு, தனுஷின் தாய் மாமன்கள் கிருபானந்தன், நடராஜன், அவரது அத்தை அஸ்வினி ஆகியோர் திருமணம் செய்து வைக்க முடியாது என கூறி, அந்த பெண்ணை திட்டி கர்ப்பத்தை கலைக்கும்படியும் வற்புறுத்தியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தனுஷ், கிருபானந்தன், நடராஜன், அஸ்வினி ஆகிய 4 பேர் மீதும் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் வழக்குப்பதிந்து தனுஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி