உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகனுடன் இளம்பெண் மாயம்

மகனுடன் இளம்பெண் மாயம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்ன துரை மகன் கோடீஸ்வரன்,29; இவரது மனைவி சத்யா, 26; இந்த தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை கோடீஸ்வரன் விளைநிலத்திற்கு சென்று பணிகள் முடித்து விட்டு, காலை 10:00 மணிக்கு மீண்டும் வீடு திரும்பினார். வீட்டில் சத்யா இல்லாததால் அக்கம், பக்கத்தில் தேடிப்பார்த்து விசாரித்தார். அப்போது அவர் இளைய மகனுடன் வெளியில் சென்றதாக தெரிவித்தனர். தொடர்ந்து, பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவர் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !