போலீஸ் விசாரணைக்கு வந்த முதியவரை தாக்கிய வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விசாரணைக்கு வந்த முதியவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை சேர்ந்தவர் ஆதிமூலம்,65; இவரது மகன் திருக்குமரன் உளுந்துார்பேட்டையை சேர்ந்த முருகன் மகள் ரம்யாஸ்ரீ என்பவரை கடத்தி சென்றதாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி கடந்த 18 ம் தேதி கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த ஆதிமூலத்தை, காவல் நிலையம் அருகே ரம்யாஸ்ரீயின் தம்பி ரமல்நாத்,21; திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் ரமல்நாத் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.