மேலும் செய்திகள்
பணம் கேட்டு மிரட்டிய போலி அதிகாரி கைது
27-Aug-2025
உளுந்துார்பேட்டை : அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த பாலி கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் நேற்று காலை சேதப்படுத்தி இருந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் உளுந்துார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் முருகன், 35; என்பவர் சிலையை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
27-Aug-2025