காதலிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
காட்டுமன்னார்கோவில் : இன்ஸ்டாகிராம் காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த புதுக்கோட்டை வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் பிரகாஷ் 32; இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்தார். கடலுார் மாவட்டம் குமராட்சியை அடுத்த மேலநெடும்பூரைச் சேர்ந்த 25 வயது பெண் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இருவரும் 'இன்ஸ்டாகிராம்' மூலம் நண்பராகினர். நாளடவில் காதலாக மாறி, இளம்பெண் ஒவ்வொரு வாரமும் சென்னைக்கு சென்று காதலனுடன் ஜாலியாக சுற்றியுள்ளார்.ஒரு கட்டத்தில் இளம் பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி கூறியதற்கு காதலன் பிரகாஷ் மறுத்தார். இதற்கு பின் இளம்பெண் போன் அழைப்பை பிரகாஷ் ஏற்காமல் துண்டித்து வந்துள்ளார். தொடர்ந்து, இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்ததால், பிரகாஷ், போனில் ஆபாசமாக திட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். . இது குறித்து நேற்று இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் குமராட்சி போலீசார், பிரகாஷ் 32; மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.