உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தனுாரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் விக்னேஸ்வரன், 28; கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுார் கிராமத்தில் தங்கி, ஏஜன்சீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் சென்ற விக்னேஸ்வரன், அரியபெருமானுார் துர்கை அம்மன் கோவில் அருகே சாலையை கடக்க முயன்றார்.அப்போது எதிரே கிழங்கு ஏற்றி வந்த லாரி, விக்னேஸ்வரன் மீது மோதியது. படுகாயமடைந்த அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ