டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி
சின்னசேலம்; சின்னசேலம் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் இறந்தார். சின்னசேலம் அடுத்த வி.மாமாந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிமுத்து மகன் பாலமுருகன், 30; தனியார் கம்பெனியில் சேல்ஸ் மேனாக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பினார். வி.மாமாந்தூர் அரசு பள்ளி அருகே, எதிரே பெரம்பலுார் மாவட்டம், பில்லங்குளம், கிராமத்தை சேர்ந்த மணிமாறன், 40; என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். விபத்து குறித்து கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.