உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  விபத்தில் வாலிபர் பலி

 விபத்தில் வாலிபர் பலி

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டைச் சேர்ந்த அர்ஜூனன் மகன் ஆனந்தபாபு, 27; இவர், நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தனது பைக்கில் ராமநாதபுரம் கோட்டை மெயின்ரோடு அருகே சென்ற போது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்தபாபு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ