27 கடைகளில் 35 வீட்டு சிலிண்டர் பறிமுதல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் உணவகம் மற்றும் டீ கடைகளில், வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை அலுவலர் நேற்று ஆய்வு செய்தனர்.இதில், 27 இடங்களில் இருந்து, 35 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டு உபயோக சிலிண்டர்களை, வணிக நோக்கத்திற்கு கடைகளில் பயன்படுத்துவது தெரிந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.