3.5 கிலோ குட்கா பறிமுதல்
புழல்:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை, தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.அந்த வகையில், நேற்று முன்தினம் புழல் சிறை எதிரே, ஜெயின் கோவில் அருகே நின்றிருந்த சந்தேக நபரை சோதனையிட்ட போது, அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது.அவர், புழல், திருவள்ளுவர் தெரு பகுதியை சேர்ந்த, 'குள்ள' விஜய், 29, என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த, 3.5 கிலோ குட்கா பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அவற்றை, அவர் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து, சென்னையில் விற்றது தெரியவந்தது. இவர் மீது, ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.