உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டில் இருந்து வெளியேறி சுற்றிய 9 வயது சிறுவன் காஞ்சியில் மீட்பு

வீட்டில் இருந்து வெளியேறி சுற்றிய 9 வயது சிறுவன் காஞ்சியில் மீட்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், பெற்றோர், உறவினர் யாருமின்றி, 9வது சிறுவன் தனியாக சுற்றி வந்துள்ளான். கோவிலில் பக்தர்கள் அவனிடம் விசாரித்துள்ளனர்.அப்போது, வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வந்ததாக சிறுவன் தெரிவித்துள்ளான். உடனடியாக, சிவ காஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் கோவிலுக்கு வந்து சிறுவனை மீட்டு, அவனிடம் விசாரித்துள்ளனர். அப்போது, 'செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி கிராமத்தில் வசிப்பதாகவும், 5ம் வகுப்பு படிப்பதாக' தெரிவித்துள்ளான்.மேலும், 'நேற்று முன்தினம் காலை, தந்தை திட்டியதால் கோபித்துக் கொண்டு பேருந்து ஏறி காஞ்சிபுரம் வந்ததாக' தெரிவித்துள்ளான்.ஒரத்தியில் உள்ள சிறுவனின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிறுவனின் தாயார் மீனாட்சி மற்றும் உறவினர்கள் காஞ்சிபுரம் வந்தனர். போலீசார் சிறுவனை அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை