உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்தில் பெண் பலி

சாலை விபத்தில் பெண் பலி

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஆலடித்தோப்பு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மனைவி அன்புக்கரசி, 37; இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.இவர், நேற்று, பிற்பகல் 12:00 மணிக்கு, கணவர் லோகநாதனுடன், 'டி.வி.எஸ்., எக்ஸ்.எல்.,' இருசக்கர வாகனத்தில், காஞ்சிபுரம்- - வாலாஜாபாத் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, அய்யம்பேட்டை அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது உரசியதில் கணவர்-, மனைவி இருவரும் விழுந்தனர்.இதில், அன்புகரசி, லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லோகநாதன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.வாலாஜாபாத் போலீசார் அன்புக்கரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை