உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அறம்வளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

அறம்வளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகில், அறம்வளத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 52 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழு, கும்பாபிஷேக விழா குழு, செங்குந்த மரபினர், ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர்.அதன்படி ராஜகோபுரம் நிர்மானிக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 25ல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை உள்ளிட்டவை நடந்தது.நேற்று, காலை 9:00 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, ராஜகோபுரம், விமானத்திற்கும், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மஹா அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், சுவாமி புறப்பாடும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ