மேலும் செய்திகள்
மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை
25-Feb-2025
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில், காந்தி சாலை, தேரடி சாலை, திருவள்ளூர் சாலை, திருமங்கையாழ்வார் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில், திருமங்கையாழ்வார் சாலையோரம் உள்ள மின்கம்பம் சேதமாகி, கான்கிரீட் பெயர்ந்ததையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் மின் வாரிய அதிகாரிகள், புதிய மின்கம்பத்தை நட்டு, மின் கம்பியை மாற்றி இணைப்பு வழங்கினர்.இந்த நிலையில், சேதமடைந்த பழைய மின்கம்பம் அகற்றப்படவில்லை. அந்த மின் கம்பம் விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மற்றும் பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற, ஸ்ரீபெரும்புதுார் மின் வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
25-Feb-2025