மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
19 hour(s) ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
19 hour(s) ago
வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு
19 hour(s) ago
கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏ.டி.எம்., இயந்திரம் இல்லாததால், பயணியர் மிகுந்த சிரமம் அடைந்தனர். பயணியரின் கோரிக்கையை ஏற்று, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள், பேருந்து நிலையத்திற்குள் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில், பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், புதிதாக ஏ.டி.எம்., வங்கி சேவை நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து, மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் அமைக்க முயற்சி நடந்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், பயணியர் வசதிக்காக, ஆவின் பாலகம் அருகில் துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திர சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இந்த இயந்திரத்தில், ஐந்து ரூபாய் நாணயங்கள் இரண்டு அல்லது 10 ரூபாய் நாணயம் ஒன்று அல்லது 10 ரூபாய் தாள் செலுத்தி, பயணியர் மஞ்சள் துணிப்பை பெற்றுக் கொள்ளலாம் என, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago