உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சுந்தர வரதர் கோவிலில் 17ல் பிரம்மோற்சவம்

சுந்தர வரதர் கோவிலில் 17ல் பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவம் வரும் 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதில், தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உத்திரமேரூரில் உள்ள முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். வரும் 18ம் தேதி ஹம்ச வாகனமும், 19ம் தேதி கருடசேவையும், 23ம் தேதி தேரோட்டமும், 25ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது. ஏப்., 26ல் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை