உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் வடிகால்வாயில் குடிநீர் பைப் உடைப்பு

மழைநீர் வடிகால்வாயில் குடிநீர் பைப் உடைப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 2வது வார்டில் மெக்ளின்புரம் உள்ளது. அப்பகுதி, புண்ணியநாதன் தெருவில், சில நாட்களுக்கு முன் பேரூராட்சி பொது நிதியின் கீழ், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.அப்போது அப்பகுதியில் தனி நபர் ஒருவரின் பட்டா நிலத்தின் மீது கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளதாக தனிநபர் ஆட்சேபனை தெரிவித்தார்.அதையடுத்து கால்வாயின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்டது. அப்போது, கால்வாய் சுவர் அப்புறப்படுத்தும் பணியின் போது, அப்பகுதியில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டது. அப்பகுதி குடிநீர் பைப் சீரமைக்கப்படாமல் உள்ளது.இதனால், குடிநீர் பைப் வழியாக தண்ணீர் செல்லும் நேரத்தில், நீர் கசிந்து வீணாவதோடு, மீண்டும் அதே பைப் வழியாக சேற்று தண்ணீர் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் கூறி வருகின்றனர்.எனவே, மெக்ளின்புரம் பகுதியில், நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டு உடைப்பு ஏற்பட்ட குடிநீர் பைப்பை சீரமைத்திட அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ