பயணியரை தரக்குறைவாக நடத்திய பஸ் நடத்துநர்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு, 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.நேற்று முன்தினம் நள்ளிரவில், சென்னையில் இருந்து, காஞ்சிபுரம் வழியாக, நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டுச் சென்ற விரைவு பேருந்து ஒன்று, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.அப்போது, திண்டிவனம் பகுதிக்கு செல்லும் பயணி ஒருவர், திண்டிவனம் வரையில் செல்ல வேண்டும் என, நாகப்பட்டினத்திற்கு செல்லும் விரைவு பேருந்தில் ஏற முயன்றுள்ளார்.அப்போது, அரசு விரைவு பேருந்து நடத்துநர், திண்டிவனத்தில் பேருந்து நிற்காது என, கூறியுள்ளார். வேறு பேருந்துகளும் இல்லாத சூழலில் ஏற முயன்ற முதியவரை, அரசு பேருந்து நடத்துநர் தரக்குறைவாக பேசி, கையால் இடித்து தள்ளி உள்ளார்.அரசு விரைவுப் பேருந்து நடத்துநர், பயணி ஒருவரிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது பொது மக்களிடையே முகம் சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.