மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
17 hour(s) ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
17 hour(s) ago
வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு
17 hour(s) ago
செங்கல்பட்டு:திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து கோயம்பேடு பழ மார்க்கெட்டிற்கு பப்பாளி பழ லோடு ஏற்றிக்கொண்டு, 'அஷோக் லேலண்ட் தோஸ்த்' சரக்கு வாகனம், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது.சரக்கு வாகனத்தை பழனியை சேர்ந்த முத்து, 30, என்பவர் இயக்கி வந்தார்.செங்கல்பட்டு பழவேலி அருகில் முன்னே சென்ற காரை முந்திச்செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், காரின் மீது உரசி சாலை மையத்தடுப்பில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், சரக்கு வாகனத்தில் இருந்த மொத்த பழங்களும் சாலையில் விழுந்து உருண்டோடின. முத்து அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பினார்.இந்த விபத்தால், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மார்க்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, 3 கி.மீ., வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் செங்கல்பட்டு தாலுகா போலீசார், கவிழ்ந்து கிடந்த வாகனத்தையும், சாலையில் கிடந்த பப்பாளிப் பழங்களையும் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago