| ADDED : மார் 21, 2024 11:11 AM
காஞ்சிபுரம்:தேர்தலுக்காக பண பட்டுவாடா செய்வதை தவிர்க்கவும், பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்குவதை தடுக்க பறக்கும் படை, கண்காணிப்பு குழு என, 84 குழுவினர் பணியில் உள்ளனர்.பல்வேறு இடங்களில் இக்குழுவினர் வாகன தணிக்கை செய்கின்றனர். ஆவணமின்றி பொருட்கள் வைத்திருந்ததாக, 9.5 கோடி ரூபாய் மதிப்பில், தங்க நகை, வெள்ளி பொருட்கள், சமையல் பொருட்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பறிமுதல் செய்யப்படும் பொருட்களை, ஆவணங்கள் காண்பித்து பெறுவதற்கு, கலெக்டர் அலுவலகத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.திட்ட இயக்குனர் ஜெயகுமார், கணக்கு பிரிவு கலெக்டரின் நேர்முக உதவியாளர் புஷ்பா, கருவூல அலுவலர் அருள்குமார் ஆகிய மூவர் இக்குழுவில் உள்ளனர்.பொருட்களை மீண்டும் பெறுவதற்கு, கணக்கு பிரிவின் கலெக்டரின் நேர்முக உதவியாளர் புஷ்பாவை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.