உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் ஓய்வு எடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்

சாலையில் ஓய்வு எடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்

தண்டலம், பள்ளூர் - சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., ஒருவழி சாலை உள்ளது.இந்த சாலை, ஏழு மீட்டரிருந்து, 10.5 மீட்டராக மேம்படுத்தப்பட்ட இருவழி சாலைக்கு ஏற்ப, 44 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவுபடுத்தப்பட்டு, வாகன பயன்பாட்டில் உள்ளது.பரந்துார், தண்டலம் ஆகிய பகுதிகளில் தான்தோன்றி தனமாக சுற்றித்திரியும் மாடுகள் சாலை நடுவே படுத்துறங்குகின்றன.இது தவிர, பரந்துார், கொட்டவாக்கம், படுநெல்லி ஆகிய கிராம சாலையோரம் மாடுகள் கட்டி வைப்பதால், இரவு நேரங்களில் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.எனவே, சாலையோரம் படுத்து உறங்கும் மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை