உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிநீர் தொட்டி சேதம்: அகற்ற வலியுறுத்தல்

குடிநீர் தொட்டி சேதம்: அகற்ற வலியுறுத்தல்

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கம் ஊராட்சியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளுக்கு சிறுமின் விசை குழாய், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், பெரிய தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று, 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.சேதமடைந்த இந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழல் உள்ளது. இதன் அருகே அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் அடிக்கடி விளையாடி வருகின்றனர்.மேலும், அப்பகுதியில் கால்நடைகளும் சுற்றித் திரிகின்றன. சேதமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற, ஆனம்பாக்கம் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !