உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி சுற்றுச்சுவர் இரும்பு கேட் சேதம்

பள்ளி சுற்றுச்சுவர் இரும்பு கேட் சேதம்

பிச்சிவாக்கம், : மதுரமங்கலம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 30க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்த பள்ளி, பிச்சிவாக்கம் - துளசாபுரம் கிராம பிரதான சாலையையொட்டி இருப்பதால், மாணவ- - மாணவியர்களின் நலன் கருதி, பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.இந்த சுற்றுச்சுவருக்கு, இருபுறமும் இரும்பிலான கேட் போடப்பட்டது. இதில், ஒரு கேட் சேதம் ஏற்பட்டு, சுற்றுச்சுவரில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டு உள்ளது.அதன் பின், இரும்பு கேட் சுற்றுச்சுவரில் பொருத்தவில்லை. பள்ளி சுற்றுச்சுவருக்கு இரும்பிலான கேட் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ