உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின் கம்பியில் உரசும் மரக்கிளையால் அபாயம்

மின் கம்பியில் உரசும் மரக்கிளையால் அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சியில் இருந்து கூழாங்கல்சேரி வழியாக, அழகூர், மாகாணியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.இந்த சாலையோரம் கம்பங்கள் வழியாக மின்வழித்தடம் செல்கிறது. கூழாங்கல்சேரி அருகே, மின்கம்பியில் வேப்பமர கிளைகள் சூழ்ந்துள்ளன. மின்வாரியத் துறையினர் முறையாக பராமரிக்காததால், வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு அடிக்கடி துண்டிப்பு ஏற்படுகிறது.மேலும், மின்கம்பியில் உரசும் மரக்கிளைகளால், மின்கம்பி துண்டாகி, சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள், மின் வழித்தடத்தில் இடையூறாக வளர்ந்திருக்கும் மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை