உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கார்கள் மோதி விபத்து முதியவர் பலி

கார்கள் மோதி விபத்து முதியவர் பலி

திருவள்ளூர்,திருவள்ளூர் மாவட்டம் பூனிமாங்காடை சேர்ந்தவர் சாய்கணேஷ், 49. இவர், 'ஹூண்டாய்' காரில், நேற்று முன்தினம், திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார்.பாண்டூர் அருகே வந்தபோது, எதிரே வந்த, 'மாருதி பொலினோ' கார் மோதியது. இதில், 'மாருதி பொலினோ' காரில் வந்த பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பகுதியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன், 45, தேவராஜன், 78, சுப்புலட்சுமி, 42, ஸ்ரீஜோதி, 51, ஆகியோர் படுகாயமடைந்தனர்; சாய்கணேஷ் லேசான காயமடைந்தார்.திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, தேவராஜன் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ