மேலும் செய்திகள்
வட்டு எறிதல் போட்டி சங்கரா மாணவருக்கு பதக்கம்
8 hour(s) ago
உத்திரமேரூரில் வி.சி.,க்கள் சாலை மறியல்
8 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தையொட்டி பொன்னேரி ஏரி அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரி நீரை பயன்படுத்தி அப்பகுதி சுற்றியுள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.பின், விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறியதால் ஏரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தாவிட்டாலும், அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.இந்த ஏரி முழுமையாக நிரம்பி கலங்கல் வழியாக கோனேரிகுப்பம் பகுதிக்கு உபரிநீர் வெளியேறும் கால்வாய் குப்பை குவியல் மற்றும் செடி, கொடிகள் புதர் மண்டியுள்ளதால் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், ஏரி முழுமையாக நிரம்பினால் உபரிநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.இதனால், ஏரியை ஒட்டியுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் செல்லும் நிலை உள்ளது. எனவே, பொன்னேரி ஏரியில் இருந்து கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறும் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
8 hour(s) ago
8 hour(s) ago