பெண்ணிடம் செயின் பறித்த இன்ஜினியர் கைது
குன்றத்துார்: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் திருமாள், 26. சிவில் இன்ஜினியர். படப்பை அருகே ஒரகடத்தில் தங்கி பணியாற்றி வந்தார். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் 3 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். இதனால், நண்பர்களிடம் நகை மற்றும் பணம் கடன் வாங்கியுள்ளார். பணம் கொடுத்தவர்கள் திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலில் திருமாள் இருந்துள்ளார்.இந்நிலையில், படப்பை அருகே ஆதனுார் வழியாக மோட்டார் சைக்கிளில் கடந்த 1ம் தேதி திருமாள் சென்றார். அப்போது, அந்த வழியே நடந்து சென்ற 70 வயது மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்து தப்பி சென்றார்.கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் திருமளை அடையாளம் கண்ட போலீசார் அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.