தொழில் முனைவோர் பயிலரங்கம்
காஞ்சிபுரம்,:‛யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில், நாடு முழுதும் முக்கிய நகரங்களில் தொழில் முனைவோர் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரத்தில் அமைந்துள்ள மஹரிஷி வித்யா மந்திர் பள்ளியில், வருங்கால தொழில் முனைவோர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கம் நேற்று நடந்தது.இதில், திரளான மாணவ -மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை காஞ்சிபுரம் ‛யங் இந்தியன்ஸ்' அணியினர் செய்திருந்தனர்