விவசாயிகள் அடையாள அட்டை வரும் 15க்குள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம்: சிறுகாவேரிப்பாக்கம் வட்டார வேளாண் விரிவாக்க மைய கட்டுப்பாட்டில் இருக்கும் கிராம விவசாயிகளுக்கு, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு, வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணியை வேளாண் துறை துவக்கி உள்ளது.இதில், வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், வேளாண் தொழில்நுட்பத்தினர், உதவி தோட்டக்கலை அலுவலர், ஆகியோர் தனித்தனியாக வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி விபரங்களை பதிவேற்றம் செய்துவருகின்றனர்.விண்ணப்பிக்க தவறிய, சிறுகாவேரிப்பாக்கம்வட்டார விவசாயிகள்- வரும் 15ம் தேதிக்குள் வேளாண் துறையினர் மற்றும் பொது சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என, சிறுகாவேரிப்பாக்கம் வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் காளியம்மாள் தெரிவித்தார்.