அதிகாரிகளை கண்டித்து மாஜி எம்.எல்.ஏ., ஆவேசம்
குன்றத்துார்: குன்றத்துார் பேருந்து நிலையத்தில் இருந்துமுருகன் கோவில் செல்லும் சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்களை, வருவாய் துறை, நெடுஞ்சாலை துறையினர் சில நாட்களுக்கு முன் இடித்து அகற்றினர்.கட்டடங்கள் இடித்து அகற்றிய இடத்தின் அருகே, தி.மு.க., கொடி கம்பம் மட்டும் அகற்றப்படாமல் இருந்தது.ஸ்ரீபெரும்புதுார் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனி, நேற்று கம்பம் அகற்றாதது குறித்து கேள்வி எழுப்பினார்.''குடியிருக்கும் வீடுகளை இடிக்கும்போது, கொடி கம்பத்தை ஏன் இடிக்கவில்லை. அதை அகற்ற, அதிகாரிகள் பயப்படுகின்றனரா,'' என, கேள்வி எழுப்பிச் சென்றார்.