மேலும் செய்திகள்
'மக்களுடன் முதல்வர்' முகாமில் 366 மனுக்கள் ஏற்பு
28-Aug-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, காரை ஊராட்சியில், உடற்பயிற்சி கூட கட்டடம் அடிக்கல் நடும் விழா நடந்தது.இந்த விழாவிற்கு, காரை ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டடம் கட்ட பூமி பூஜை போட்டார்.இதையடுத்து, பரந்துார், புள்ளலுார், ஈஞ்சம்பாக்கம் ஆகிய அரசு பள்ளிகளில், மாணவ - -மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றியக் குழு சேர்மன் தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
28-Aug-2024