உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிக்கராயபுரம் சுடுகாட்டுக்கு குப்பையால் சமாதி

சிக்கராயபுரம் சுடுகாட்டுக்கு குப்பையால் சமாதி

குன்றத்துார்:சிக்கராயபுரம் சுடுகாட்டு, முழுதும் குப்பை கொட்டி மூடப்பட்டுள்ளதால் உடல்களை அடக்கம் செய்வோர் வேதனையடைந்துள்ளனர்.குன்றத்துார் ஒன்றியத்தில் சிக்கராயபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு தினசரி சேகரமாகும் குப்பையை கொட்ட போதிய இடமில்லை. இதனால், குன்றத்துார் - குமணன்சாவடி நெடுஞ்சாலையில் உள்ள சிக்கராயபுரத்தில், சுடுகாட்டில் குப்பையை கொட்டுகின்றனர்.இதனால், சுடுகாடு முழுதும் குப்பை குவியலாக மாறி உள்ளது. அந்த பகுதியில் இறப்பு ஏற்பட்டால் குப்பை குவியல்களுக்கிடையே சடலங்களை எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்ய நேரிடுகிறது.இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'கடைசி நேர ஈமசடங்கு களை கூட சிக்கராயபுரத்தில் நிம்மதியாக செய்ய முடியாத வகையில் சுடுகாட்டுக்கு, குப்பையால் சமாதி கட்டியுள்ளனர். குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், அங்குள்ள குப்பையை அகற்ற வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை