உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நீர் வரத்து கால்வாயையொட்டி கொட்டப்படும் கழிவால் சுகாதார சீர்கேடு

நீர் வரத்து கால்வாயையொட்டி கொட்டப்படும் கழிவால் சுகாதார சீர்கேடு

உத்திரமேரூர், உத்திரமேரூர் பேரூராட்சி, அருணாச்சல பிள்ளைசத்திரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவு, துாய்மை பணியாளர்களை கொண்டு, பேரூராட்சி நிர்வாகம் தினமும் சேகரித்து வருகின்றனர்.தற்போது, அப்பகுதிவாசிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தங்கி வேலை செய்வோர், குடியிருப்புகளில் இருந்து இறைச்சி மற்றும் காய்கறி கழிவை, அங்குள்ள புக்கத்துறை நெடுஞ்சாலையோரத்தில், அருணாச்சல பிள்ளைசத்திரம் நீர் வரத்து கால்வாயையொட்டி, பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து வீசி செல்கின்றனர்.அப்பகுதிகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை பயன்படுத்தாமல், சாலையோரத்தில் குப்பையை வீசி வருவது தொடர்ந்து நடக்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியே நடந்து செல்லும் பாதசாரிகள் முகம் சுளிக்கின்றனர்.மேலும், காற்று வீசும் நேரங்களில் குப்பை பறந்து, வாகன ஓட்டிகள் மேலே விழுகிறது. தொடர்ந்து, துர்நாற்றம் வீசி வருவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சாலையோரத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை