மேலும் செய்திகள்
வட்டு எறிதல் போட்டி சங்கரா மாணவருக்கு பதக்கம்
3 hour(s) ago
உத்திரமேரூரில் வி.சி.,க்கள் சாலை மறியல்
3 hour(s) ago
அரும்பாக்கம் : அரும்பாக்கம், விநாயகபுரம் முதலாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் செல்வி, 29. இவர் நேற்று, அரும்பாக்கம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.அதில், 'எனக்கு குமார், 32, என்பவருடன் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான என் கணவர், தினமும் என்னை அடித்து துன்புறுத்துகிறார். நேற்று முன்தினம், கொலை செய்யும் நோக்கில் என்னை தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து போலீசார், நேற்று காலை குமாரை அழைத்து விசாரித்தனர். அவர் மனைவியை தாக்கியது உறுதியானதால், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.தொடர் விசாரணையில், குமார் கடந்தாண்டு, சொந்த ஊரான விருதுநகருக்குச் சென்ற போது, மனைவியிடம் பேசிய ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, சிறைக்கு சென்று வந்தது தெரிந்தது.
3 hour(s) ago
3 hour(s) ago