உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / லாரி புக்கிங் அலுவலகத்திற்கு முறைகேடான மின் இணைப்பு

லாரி புக்கிங் அலுவலகத்திற்கு முறைகேடான மின் இணைப்பு

காஞ்சிபுரம்:அரசு புறம்போக்கு நிலங்களில் கட்டப்படும் கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது என, மின்வாரியம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.இருப்பினும் பல இடங்களில் விதிமீறி மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு, முறைகேடான மின் இணைப்புகள் மீது புகார் எழுந்தபோதும், மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.காஞ்சிபுரம் அருகே, சிறுகாவேரிபாக்கம் ஊராட்சியில் உள்ளது கங்கையம்மன் கோவில். இக்கோவிலில் உள்ள மின் இணைப்பிலிருந்து, அருகேயுள்ள அரசு புறம்போக்கில் இயங்கும் தனியார் லாரி புக்கிங் அலுவலகத்திற்கு, முறைகேடாக மின்சாரம் எடுத்து பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட லாரி புக்கிங் அலுவலகத்திற்கு 7,654 ரூபாய் அபராதம் விதித்து, மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து, கோவிலுக்கு வழங்கப்பட்ட மின் கட்டண முறையில் மாற்றம் செய்து, வணிக ரீதியிலான கட்டண வகைப்பாடாக மாற்றி, அதே லாரி புக்கிங் அலுவலகத்திற்கு, கோவிலில் இருந்து மின் இணைப்பை பெற்றுள்ளனர்.முறைகேடாக பயன்படுத்தும் இந்த மின் இணைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி