உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழவேரி பாலாறில் சீமை கருவேல மரங்களால் விவசாய நிலங்களின் நீர்மட்டம் குறையும் அவலம்

பழவேரி பாலாறில் சீமை கருவேல மரங்களால் விவசாய நிலங்களின் நீர்மட்டம் குறையும் அவலம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் அருகே பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. திருமுக்கூடல் அடுத்து, பழவேரி பாலாற்று படுகை உள்ளது.அப்பகுதியில், 10 ஆண்டுகளுக்கு முன் அரசு அனுமதி பெற்ற மணல் குவாரி செயல்பட்டது. அப்போது, அரசு அனுமதித்த அளவைக் காட்டிலும், கூடுதலான துாரம் மற்றும் அதிக ஆழம் பள்ளம் போட்டு மணல் அள்ளப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் பலரும் ஆதங்கப்பட்டனர்.இதனிடையே மணல் குவாரி செயல்படுத்தப்பட்ட பழவேரி பாலாற்றுப் படுகையில், பலவகையான செடி, கொடிகள் மற்றும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து புதராக மாறியது.அவ்வப்போது சுற்றுவட்டார பகுதியினர் விறகுக்காக அம்மரங்களை வெட்டினாலும் தொடர்ந்து அவை வளர்ந்து பாலாற்றுப் படுகை காடு போல காணப்படுகிறது.இதனால், சுற்றி உள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர்மட்ட ஆதாரம் குறைந்து வரும் அவலம் நிலவுகிறது. எனவே, பழவேரி பாலாற்றுப் படுகையில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை